வியாழன், 10 பிப்ரவரி, 2011

இலங்கையில் குளிருடன் கூடிய காலநிலை ஏப்ரல் முடியும் வரை தொடரும்


உலக காலநிலை மாற்றங்கள் காரணமாக, நாட்டில் முற்றிலும் வெயிலான காலநிலை ஏற்படுவதற்கு சில மாத காலம் செல்லும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தற்போதைய லா நினா காலநிலையானது ஏப்ரல் மாத இறுதி அல்லது மே முற்பகுதி வரை நீடிக்கும் எனத் தெரிவித்துள்ளது.
இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் எஸ்.எச். காரியவசம் இது தொடர்பாக தெரிவிக்கையில், எதிர்வரும் நாட்களில் மழை வீழ்ச்சி குறையும் என எதிர்பார்க்கலாம் என்றும், இருந்தபோதிலும் முற்றாக வெயிலான காலநிலையை எதிர்பார்க்க முடியாது எனவும் அவர்  கூறியுள்ளார்.


நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் தாழமுக்கம் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என தெரிவித்துள்ள அவர் காற்றின் காரணமாக வெப்பநிலையில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக