வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

"கல்கிதாசன் கவிதைகள்" நூல் வெளியீடு


கல்கிதாசன் கவிதைகள் நூல் வெளியீடு நிகழ்வு 20.மாசி ஞாயிறு பிற்பகல் 3.30 இடம்பெற உள்ளது ,  
தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் அழைக்கின்றனர் 

வியாழன், 10 பிப்ரவரி, 2011

இலங்கையில் குளிருடன் கூடிய காலநிலை ஏப்ரல் முடியும் வரை தொடரும்


உலக காலநிலை மாற்றங்கள் காரணமாக, நாட்டில் முற்றிலும் வெயிலான காலநிலை ஏற்படுவதற்கு சில மாத காலம் செல்லும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தற்போதைய லா நினா காலநிலையானது ஏப்ரல் மாத இறுதி அல்லது மே முற்பகுதி வரை நீடிக்கும் எனத் தெரிவித்துள்ளது.
இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் எஸ்.எச். காரியவசம் இது தொடர்பாக தெரிவிக்கையில், எதிர்வரும் நாட்களில் மழை வீழ்ச்சி குறையும் என எதிர்பார்க்கலாம் என்றும், இருந்தபோதிலும் முற்றாக வெயிலான காலநிலையை எதிர்பார்க்க முடியாது எனவும் அவர்  கூறியுள்ளார்.


நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் தாழமுக்கம் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என தெரிவித்துள்ள அவர் காற்றின் காரணமாக வெப்பநிலையில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

திங்கள், 7 பிப்ரவரி, 2011

காஞ்சிரங்குடா ஸ்ரீ வல்லிபுரத்தில் குருகுலம் வழங்கிய நிவாரணப் பணி Sunday, February 06, 2011



தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதினம்  காஞ்சிரங்குடா ஸ்ரீ வல்லிபுரத்தில் இருக்கும் மக்களுக்கு நிவாரண வழங்கி இருந்தனர் .  இந் நிகழ்வில்
திரு. இராஜரத்தினம் மற்றும் இன்னும் சிலர் கலந்து கொண்டனர்

திருக்கோவில் காஞ்சிரங்குடா வில் காட்டு யானை தாக்கி மரண சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

திருக்கோவில் காஞ்சிரங்குடா வில் காட்டு யானை தாக்கி மரண சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
விநாயகபுரத்தை சேர்ந்த குடும்பஸ்தர் கந்தைய நாகராஜா என்பவரே மரணமடைந்துள்ளார் . 

(பாவட்டா ) வயல் காவலுக்கு சென்ற போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது ..

தற்போது வயல்களுக்கு வரும் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது . 
பிரதேச மக்கள் சார்பாக அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் .   

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

4ஜி அலைவரிசை

லாஸ்வேகாஸ் தகவல் தொழில் நுட்ப திருவிழாவில் கலந்து கொண்ட நிறுவனங்கள் அனைத்தும், வரும் ஆண்டுகளில் தாங்கள் அறிமுகப்படுத்த இருக்கும் டிஜிட்டல் சாதனங்கள், சேவைகள் மற்றும் தொழில் நுட்பங்களை அறிமுகப் படுத்தியுள்ளன. 

இவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். 

1. ஏறத்தாழ அனைத்து நிறுவனங்களும் ஏதாவது ஒரு வகையில் பேசியது 4ஜி அலைவரிசை தொடர்பு குறித்துத் தான். 

பல நிறுவனங்கள் 4ஜி அலைவரிசை தொடர்புடன் கூடிய மொபைல் போன் அல்லது டேப்ளட் பிசியைக் காட்சிக்குக் கொண்டு வந்திருந்தனர். 4ஜி அலைவரிசை கொண்ட மொபைல் போன்கள் இதுவரை இல்லாத அளவிற்கு தொலைதொடர்பு வேகத்தைத் தரும். 

ட்ரெயினில் பயணிக்கும் போது கூட விநாடிக்கு 100 மெகாபிட் அளவில் இணைய இணைப்பு பெற முடியும். மிகக் குறைந்த வேக இணைப்பு கூட விநாடிக்கு ஒரு கிகா பிட் வேகத்தில் இருக்கும்.

அறிமுகப்படுத்தப்பட்ட சாதனங்களில், ஆர்.ஐ.எம். நிறுவனத்தின் பிளே புக் டேப்ளட் பிசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஐ-பேட் சாதனத்தைக் காட்டிலும் 400 கிராம் குறைவான எடையில், 7 அங்குல அகலத் திரையுடன் இயங்கியது. 

இதே போலக் கவனத்தை ஈர்த்த இன்னொரு சாதனம் டெல் ஸ்ட்ரீக் 7 (Dell Streak 7) டேப்ளட் பிசி. டெல் நிறுவனத்தின் 4ஜி திறன் கொண்ட முதல் டேப்ளட் பிசி இதுதான். ஆண்ட்ராய்ட் சிஸ்டம் 2.2 இயக்கத்தில் செயல்படுகிறது. 

இதில் உள்ள கொரில்லா கிளாஸ் டச் ஸ்கிரீன் திரை, வேறு எதனையும் பக்கத்தில் கூட ஒப்பிட விடுவதில்லை. இந்தியாவில் 2ஜி வரலாற்றினையும், 3ஜி முழுமையாக உண்டா என்று அறியாத நிலையையும் பார்த்துக் கொண்டிருந்தாலும், தடைகள் நீங்கி 4ஜி சாதனங்களைப் பயன்படுத்தும் வகையில் சேவை விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். 

சனி, 5 பிப்ரவரி, 2011

நாசா கடந்த வருடம் வெளியிட்ட அரிய படங்கள்! (பட இணைப்பு)







நாசா விண்வெளி ஆய்வு மையம் தொலை நோக்கு கருவி மூலம் விண்வெளியை மிகவும் நுண்ணிய முறையில் அவதானித்து உள்ளது. 

தூசி, துணிக்கைகள் உட்பட விண்வெளியில் காணப்படும் அனைத்துப் பொருட்களும் ஆராயப்பட்டு இருக்கின்றன.

அவதானங்களை புகைப் படத் தொகுப்பாக கடந்த வருட இறுதியில் வெளியிட்டு உள்ளது. 

இப்படங்கள் மிகவும் அழகானவை.. உலக மக்கள் மத்தியில் இப்படங்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து உள்ளது.

ஏராளமான வித விதமான பியர் ரின்களைச் சேகரித்துள்ள வித்தியாசமான மனிதர்!



நிக் வெஸ்ட் என்பவர் இங்கிலாந்தின் நோர்த் சமர்செஸ்ட் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு தற்போது 51 வயது. கடந்த 35 வருடங்களாக இவர் பழைய பியர்கேன்களைச் சேகரிப்பதைப் பழக்கமாகக் கொண்டுள்ளார். 

விதவிதமான 6788 பியர்கேன்களை இவர் இதுவரைச் சேகரித்துள்ளார். இவருக்கு 16 வயதாக இருந்த போது இவரின் காதலியாக இருந்த டொரோதி பியர்கேன் சேகரிப்புப் பற்றி ஒரு புத்தகத்தை இவருக்கு வழங்கினார். 

அடுத்த 35 வருடங்களுக்கு இவரோடு இதில் தானும் சேர்ந்து காலத்தைக் கழிக்க வேண்டியிருக்கும் என்று தெரியாமல் இதைச் செய்து விட்டார். 

நிக் வெஸ்ட்டின் காலம் இதிலேயே கழிந்து விட்டது. சேகரிக்கும் பியர்கேன்களை வைக்க இடம் போதாது என்பதற்காக தனது வீட்டைக் கூட மாற்றிக் கொண்டார். 

பார்வையாளர்களைக் கவர்ந்த இரட்டைத் தலைப் பாம்பு! (பட இணைப்பு

சுவிட்ஸர்லாந்தில் உள்ள பேஸல் நகரில் இடம்பெற்ற ஒரு மிருகக் கண்காட்சியில் அனைவரினதும் கவனத்தை ஈர்த்தது இந்த இரட்டைத் தலைப் பாம்பு தான். 

இவ்வாறு இரண்டு தலைகள் கொண்ட பாம்புகள் உலகில் எட்டு இருப்பதாக இதன் உரிமையாளர் டொம் பெஸர் கூறினார். 

ஒரு பார்வையாளர் 13000 பவுண் கொடுத்து இந்தப் பாம்பை வாங்க முன்வந்தும் அதை விற்க பெஸர் மறுத்துவிட்டார். 

இதன் உண்மையான பெறுமதி அதைவிட அதிகம் என்று அவர் கூறுகின்றார்.

த்ரிஷாவுக்கு கல்யாணம்

நடிகை த்ரிஷா இந்த ஆண்டு இறுதிக்குள் கல்யாணம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யாவின் குஷி படத்தின் மூலம் சிறிய கேரக்டரில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. 

பிற்காலத்தில் நாயகியாக முன்னேறி, பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நாயகிகள் பட்டியலில் இடம்பிடித்த த்ரிஷா, போதையில் குத்தாட்டம், நிர்வாண குளியல் என பல சர்ச்சைகளையும் சந்தித்து விட்டார். 

தமிழ், தெலுங்கு என பிஸியாக இருந்த த்ரிஷா, சமீபத்தில் இந்தி படம் ஒன்றிலும் நடித்தார். இதுவரை காதல் வலையில் சிக்காமல் இருந்து வந்த த்ரிஷா, இப்போது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளாராம். 

விஜய் பிறந்தநாளில் வேலாயுதம்

வேலாயுதம் படத்தில் படுபிசியாக இருக்கிறார் நடிகர் விஜய். இப்படம் வருகிற ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்தநாளில் ரிலீஸ் ஆகிறது. 

Sri lanka Cricket Team-2011