வெள்ளி, 17 ஜூன், 2011

கண்ணகி இலக்கிய விழா - 2011


இவ் வருட கண்ணகி இலக்கிய விழா [2011] எதிர் வரும் 18ம், 19ம் திகதிகளில் மட்டு நகரில் நடைபெறவுள்ளது இனி வரும் வருடங்களில் வைகாசி மாதத்தில் கிழக்கிலங்கையில் பொருத்தமான இடங்களில் இவ் விழா நடைபெறும்.


இவ் விழாவின் நோக்கம் :

1. கிழக்கிலங்கையின் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் கண்ணகி இலக்கியங்களை வெளிக் கொணர்தல்.

2. கண்ணகி தொடர்பான பண்டைய தொன்மங்களை மீட்டுப்பார்த்தல்.

3. கண்ணகி தொடர்பான இலக்கியங்களை அறிமுகம் செய்து பரவலாக்குதல்.

4. தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் குறிப்பாக கிழக்கிலங்கையிலும் நிலவும் கண்ணகி நம்பிக்கைகளுக்கிடையேயான பொதுமைகளை ஆராய்தலாகும்.


கண்ணகி இலக்கிய விழா இடம் பெறும் இடம் :

[ யூன் 18ம், 19ம் திகதிகளில் ]
மட்/ மகாஜனக் கல்லூரி
கலை அரங்கு
அரசடி
மட்டக்களப்பு.

மேலதிக தகவல்களூக்கு :

செயலாளர் - [ அ.அன்பழகன் குரூஸ் ]
[ துணையாசிரியர் - செங்கதிர் ]
கண்ணகி இலக்கிய விழாக் குழு
45A, பிரதான வீதி,
சின்ன ஊறணி,
மட்டக்களப்பு.

T.P.NO - 077-7492861
067-3650563

Email - kannahivizha@gmail.com

உங்களது மேலான அபிப்பிராயத்தையும் ஆலோசனையுடன் இவ் விழாவுக்கு பேராதரவு வழங்குவீர்கள் என நம்பிக்கையோடு எதிர்பார்க்கின்றோம்.

கண்ணகி இலக்கிய விழாக் குழு
மட்டக்களப்பு

திங்கள், 13 ஜூன், 2011

கண்ணகி அம்மன் கோவில் திருக்குளுர்த்தி நேரடி ஒளிபரப்பு

இன்று இரவு ( திங்கள் ) தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயத்தில் இடம்பெறுகின்ற திருக்குளிர்த்தி நிகழ்வுகளை நேரடியாக ஒலிபரப்பு செய்ய உள்ளோம் பூசைகள் தொடங்கியதும் நேரடி ஒளிபரப்பு ஆரம்பிக்கப்படும் .
இன்று இரவு நேரடி ஒளிபரப்பு ஆரம்பிக்கப்படும் .. உங்களது நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்      

மேலதிக தொடர்புகளுக்கு - thambiluvil@gmail.com  Or Our facebook  https://www.facebook.com/thambiluvil

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

புது வருடப் பிறப்புக் கருமங்கள் அறிவித்தல் - Notice


பிறக்க இருக்கும் சித்திரை வருட பிறப்பு நேரம் , ராசிகளின் பலன்கள் , சித்திரை அன்று செய்ய வேண்டியவை பற்றி இவ் துண்டு பிரசுரத்தில் வெளியிடப்பட்டுள்ளது .  பார்வையிடவும் .


சனி, 12 மார்ச், 2011

"கலை இளவல்" தம்பிலுவில் தயா

''தம்பிலுவில் தயா எனும் புனைபெயரில் எழுதும் நடேசன் தயானந்தம் அம்பாறை மாவட்த்திலுள்ள தம்பிலுவில் ஐப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1996 ல் எழுதத் தொடங்கிய தம்பிலுவில் தயா அக்காலத் தில் மூத்த அறிஞர் கலைஞர்களுடன் கொண்டிருந்த தொடர்பினால் அவர்களின் கருத்துக்களைக்கேட்டும் வாசித்தும் தனக்கு இலக்கியத் துறையில் ஆர்வம் வந்ததாகக் கூறுகின்றார். இதன் பயனாக இவர் ஒரு சிறந்த கவிஞன் மட்டுமல்லாது சிறந்த எழுத்தாளனாகவும், நாடகாசிரியராகவும், கட்டுரையாசிரியராகவும், சிறந்த பாடகனாகவும் இருந்து கவிதைகள் ஆய்வுக்கட்டுரைகள், மெல்லிசைப்பாடல்கள், சிறுகதைகள் நாடகங்கள், வில்லுப்பாட்டுகள் போன்ற பல ஆக்கங்களுக்குச் சொந்தக்காரராகவும் திகழ்கின்றார்.
              இவரின் கவிதைகள் பல அக்காலப் பத்திரிகைகளான தினபதி, தினமணி, சிந்தாமணி போன்றவற்றிலும் தினக்குரல், வீரகேசரி.தினமுரசு, தினக்கதிர், தினகரன் போன்ற தற்போதைய பத்திரிகைகளிலும் வெளிவந்ததோடு, சுடர, திருஒளி, கண்மணி, மாணிக்கம், குரல், திருப்பம்(இந்தியா) போன்ற சஞ்சிகைகளிலும் வெளிவந்திருந்தன. அதுமட்டுமல்லாது வாலிபர் வட்டம், ஆடவர் அரங்கு, ஒலிமஞ்சரி, இளைஞர் மன்றம், நாளையசந்ததி, கவிதைக்கலசம், வளரும் பயிர் போன்ற வானொலி நிகழ்ச்சியில் தமது இடத்தினைப் பிடித்ததோடு, இவரின் மெல்லிசைப்பாடல்கள் தமக்கென ஒரு இடத்தை தொலைக்காட்சிகளிலும் பிடித்திருந்தன.
   தமது பிரதேசத்திலமைந்துள்ள பல ஆலயங்களுக்குக் பாமாலை சூட்டியிருக்கும் இவருக்கு அப்பிரதேச பாடசாலைகள், ஆலய நிருவாகங்கள், சமூகசேவை அமைப்புகள் பலவும் பொன்னாடை சூட்டிக் கௌரவிக்கவும் மறக்கவில்லை
     அதுமட்டுமன்றி சமய சமூக பல்துறை கலைஞர்களை கௌரவித்து வருடாவருடம் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் அகில இலங்கைச் சபரிமலை சாஸ்தா பீடமானது 1993.03.14 ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களால் கலை இளவல் என்ற பட்டம் வழங்கிக் கௌரவித்தமை இவரின் தேசியரீதியான புகழை எடுத்தியம்புகின்றதெனலாம்.

சனி, 5 மார்ச், 2011

குறிஞ்சிவாண ன்.....


திருக்கோயில்ப் பிரிவிலுள்ள சாகாமம் எனும் குடியேற்றக்
கிராமத்தில் வசித்துவருகிறார்.

குறிஞ்சிவாண ன் எனும் புனைபெயரில் எழுதும் பி.மாண pக்கம் பதுளை
மாவட்டத்திலுள்ள “தெமோதரை” என்னும் இடத்தைப் பிறப்பிடமாகக்
கொண ;டவர் 65 வயதை அடைந்தும் அறுபடாப் பற்றுக்கொண ;டு கவிதை
எழுதிக்கொண ;டிருக்கிறார். 1963 ல் எழுதத் தொடங்கிய குறிஞ்சிவாண ன்
அக்காலத்தில் “மாக்ண p”இ“அக்கரைப் பாமா”இ “சாகாமம் மண pயன்” போன்ற
புனைபெயர்களிலும் கவிதை எழுதினார்.
மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் அக்கரைப்பற்றில் சிலகாலம்
வாழ்ந்து தற்போது திருக்கோயில்ப் பிரிவிலுள்ள சாகாமம் எனும் குடியேற்றக்
கிராமத்தில் வசித்துவருகிறார். தனது 18 வது வயதில் “வெற்றி நமதே” என்னும்
தலைப்பில் வீரகேசரிக்கு தனது கன்னிக்கவிதையை எழுதினார். தொடர்ந்து
தினபதிஇசிந்தாமண pஇராதா சுதந்திரன்இசெய்தி போன்ற பத்திரிகைகளில் இவரது
100 ற்கும் மேற்பட்ட கவிதைகள் பிரசுரமாகின.
1968 ல் “கல்லச்சு இயந்திரம்” ஒன்றைத் தயாரித்து அதன்மூலம் “மலைக்கீதம்”
எனும் மெல்லிசைப் பாடல் தொகுதியொன்றை வெளியிட்டார். அடுத்து மலையக
மக்களின் பிரச்சினைகளை மையமாகவைத்து “தேனிசை” என்ற
பாடல்தொகுப்பைப் பிரசுரித்தார் 1991 ல் ஐரோப்பிய நாடான பெர்லின் நகரில்
அமரர் “நடேசையர்” நினைவாக நடைபெற்ற தமிழ் இலக்கிய மகாநாட்டில்
இவரது 50 கவிதைகள் பார்வைக்கு வைக்கப்பட்டன.
அக்கரை மாண pக்கம்இ அமரர். கவிஞர் க.வடிவேல் கல்முனை பூபால்இ
சி.கனகசூரியம் போன்றௌருடன் கவியரங்குகளில் பங்குகொண ;டு சிறந்த
கவிதைகள் பாடியூள்ளார். 1996 ல் திருக்கோவிலில் நடைபெற்ற சாகித்திய
விழாவில் எழுத்தாளர் “அன்புமண p” அவர்களால் பொன்னாடை போர்த்திக்
கௌரவிக்கப்பட்டார். 1998 ல் வெளியான “இன்னும் விடியவில்லை” எனும்
மரபுக் கவிதைத் தொகுதியில் இவரது கவிதைகள் உள.
தற்போது 50 கவிதைகளைச் சேர்த்து அடுத்த கவிதைத்தொகுதி
வெளியிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார

    கவிக்கோகிலம் "தம்பிலுவில் ஜெகா"


    'தம்பிலுவில் ஜெகா" எனும் புனைபெயரில் எழுதும் இவரின் இயற்பெயர் திருமதி.ஜெகதீஸ்வரி நாதன். தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்றபோது தனது 12 வது வயதில் 'அன்னை" எனும் கவிதை மூலம் கவிதையுலகில் காலடி எடுத்து வைத்த இவர், 50 வயதைக் கடந்தும் அதே இளமைத் துடிப்புடன் கவிதை உலகில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறார்.
         1972 முதல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன  'சிறுவர் மலர்", 'பூவும்பொட்டும்", 'வாலிப வட்டம்", 'ஒலிமஞ்சரி", 'இளைஞர் மன்றம்" போன்ற வானொலி நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகிய கவிதைகள் இவரின் கவித்துவத்தைப் பறைசாற்றின.
             தினகரன்,வாரமஞ்சரி, வீரகேசரி,சிந்தாமணி போன்ற பத்திரிக்கைகளில் இவரது 50 ற்கும் மேற்பட்ட கவிதைகள் வெளியாகியிருந்தன. தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் தமிழாசிரியராக கடமையாற்றும் இவர் உயர்தர மாணவர் ஒன்றியத்தின் பத்திரிகைப் பொறுப்பாசிரியராக இருந்து கமலம், முத்தாரம்,செந்தாமரை போன்ற சஞ்சிகைகளையும் வெளியிட்டார். 'கோகிலம்" சஞ்சிகையின் துணை ஆசிரியராகவும் இருந்த இவரின் கவிதைகள் கோகிலம், காற்று, தூது, இந்துமதி,இதயசங்கமம், நிறைமதி போன்ற சஞ்சிகைகளில் வெளிவந்ததுடன் பெண் ; சஞ்சிகையில் தற்போதும் வெளிவந்துகொண்டிருக்கிறது.
                பல கவியரங்குகளிலும் பங்குகொண்ட இவர் 'செங்கதிர்" சஞ்சிகையின் 2008 பங்குனி சர்வதேச மகளிர் சிறப்பிதழை அலங்கரித்தார். சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலைய வெளியீடுகளான 'கண்ணாடி முகங்கள்",'கவிதைகள் பேசட்டும்" போன்ற கவிதைத் தொகுப்புகளில் தனது கவிதைகளால் இரசிகர்களின் மனதிலும் நீங்காத இடத்தைப் பிடித்துன்ளார்.
            1996.10.18 இல் திருக்கோயில் பிரதேச சாகித்திய விழாவில் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதுடன் இவரிக் கவித்துவத்திற்கு 1993.03.14 இல் கௌரவ ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களால் 'கவிக்கோகிலம்" எனும் விருதும் வழங்கப்பட்டது. 1998 இல் 'இன்னும் விடியவில்லை" எனும் கவிதைத் தொகுப்பில் இவரது கவிதைகள் நூலாக வெளிவந்தது.

    வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

    "கல்கிதாசன் கவிதைகள்" நூல் வெளியீடு


    கல்கிதாசன் கவிதைகள் நூல் வெளியீடு நிகழ்வு 20.மாசி ஞாயிறு பிற்பகல் 3.30 இடம்பெற உள்ளது ,  
    தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் அழைக்கின்றனர் 

    வியாழன், 10 பிப்ரவரி, 2011

    இலங்கையில் குளிருடன் கூடிய காலநிலை ஏப்ரல் முடியும் வரை தொடரும்


    உலக காலநிலை மாற்றங்கள் காரணமாக, நாட்டில் முற்றிலும் வெயிலான காலநிலை ஏற்படுவதற்கு சில மாத காலம் செல்லும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
    இதேவேளை, தற்போதைய லா நினா காலநிலையானது ஏப்ரல் மாத இறுதி அல்லது மே முற்பகுதி வரை நீடிக்கும் எனத் தெரிவித்துள்ளது.
    இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் எஸ்.எச். காரியவசம் இது தொடர்பாக தெரிவிக்கையில், எதிர்வரும் நாட்களில் மழை வீழ்ச்சி குறையும் என எதிர்பார்க்கலாம் என்றும், இருந்தபோதிலும் முற்றாக வெயிலான காலநிலையை எதிர்பார்க்க முடியாது எனவும் அவர்  கூறியுள்ளார்.


    நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் தாழமுக்கம் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என தெரிவித்துள்ள அவர் காற்றின் காரணமாக வெப்பநிலையில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

    திங்கள், 7 பிப்ரவரி, 2011

    காஞ்சிரங்குடா ஸ்ரீ வல்லிபுரத்தில் குருகுலம் வழங்கிய நிவாரணப் பணி Sunday, February 06, 2011



    தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதினம்  காஞ்சிரங்குடா ஸ்ரீ வல்லிபுரத்தில் இருக்கும் மக்களுக்கு நிவாரண வழங்கி இருந்தனர் .  இந் நிகழ்வில்
    திரு. இராஜரத்தினம் மற்றும் இன்னும் சிலர் கலந்து கொண்டனர்

    திருக்கோவில் காஞ்சிரங்குடா வில் காட்டு யானை தாக்கி மரண சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

    திருக்கோவில் காஞ்சிரங்குடா வில் காட்டு யானை தாக்கி மரண சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
    விநாயகபுரத்தை சேர்ந்த குடும்பஸ்தர் கந்தைய நாகராஜா என்பவரே மரணமடைந்துள்ளார் . 

    (பாவட்டா ) வயல் காவலுக்கு சென்ற போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது ..

    தற்போது வயல்களுக்கு வரும் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது . 
    பிரதேச மக்கள் சார்பாக அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் .   

    ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

    4ஜி அலைவரிசை

    லாஸ்வேகாஸ் தகவல் தொழில் நுட்ப திருவிழாவில் கலந்து கொண்ட நிறுவனங்கள் அனைத்தும், வரும் ஆண்டுகளில் தாங்கள் அறிமுகப்படுத்த இருக்கும் டிஜிட்டல் சாதனங்கள், சேவைகள் மற்றும் தொழில் நுட்பங்களை அறிமுகப் படுத்தியுள்ளன. 

    இவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். 

    1. ஏறத்தாழ அனைத்து நிறுவனங்களும் ஏதாவது ஒரு வகையில் பேசியது 4ஜி அலைவரிசை தொடர்பு குறித்துத் தான். 

    பல நிறுவனங்கள் 4ஜி அலைவரிசை தொடர்புடன் கூடிய மொபைல் போன் அல்லது டேப்ளட் பிசியைக் காட்சிக்குக் கொண்டு வந்திருந்தனர். 4ஜி அலைவரிசை கொண்ட மொபைல் போன்கள் இதுவரை இல்லாத அளவிற்கு தொலைதொடர்பு வேகத்தைத் தரும். 

    ட்ரெயினில் பயணிக்கும் போது கூட விநாடிக்கு 100 மெகாபிட் அளவில் இணைய இணைப்பு பெற முடியும். மிகக் குறைந்த வேக இணைப்பு கூட விநாடிக்கு ஒரு கிகா பிட் வேகத்தில் இருக்கும்.

    அறிமுகப்படுத்தப்பட்ட சாதனங்களில், ஆர்.ஐ.எம். நிறுவனத்தின் பிளே புக் டேப்ளட் பிசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஐ-பேட் சாதனத்தைக் காட்டிலும் 400 கிராம் குறைவான எடையில், 7 அங்குல அகலத் திரையுடன் இயங்கியது. 

    இதே போலக் கவனத்தை ஈர்த்த இன்னொரு சாதனம் டெல் ஸ்ட்ரீக் 7 (Dell Streak 7) டேப்ளட் பிசி. டெல் நிறுவனத்தின் 4ஜி திறன் கொண்ட முதல் டேப்ளட் பிசி இதுதான். ஆண்ட்ராய்ட் சிஸ்டம் 2.2 இயக்கத்தில் செயல்படுகிறது. 

    இதில் உள்ள கொரில்லா கிளாஸ் டச் ஸ்கிரீன் திரை, வேறு எதனையும் பக்கத்தில் கூட ஒப்பிட விடுவதில்லை. இந்தியாவில் 2ஜி வரலாற்றினையும், 3ஜி முழுமையாக உண்டா என்று அறியாத நிலையையும் பார்த்துக் கொண்டிருந்தாலும், தடைகள் நீங்கி 4ஜி சாதனங்களைப் பயன்படுத்தும் வகையில் சேவை விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். 

    சனி, 5 பிப்ரவரி, 2011

    நாசா கடந்த வருடம் வெளியிட்ட அரிய படங்கள்! (பட இணைப்பு)







    நாசா விண்வெளி ஆய்வு மையம் தொலை நோக்கு கருவி மூலம் விண்வெளியை மிகவும் நுண்ணிய முறையில் அவதானித்து உள்ளது. 

    தூசி, துணிக்கைகள் உட்பட விண்வெளியில் காணப்படும் அனைத்துப் பொருட்களும் ஆராயப்பட்டு இருக்கின்றன.

    அவதானங்களை புகைப் படத் தொகுப்பாக கடந்த வருட இறுதியில் வெளியிட்டு உள்ளது. 

    இப்படங்கள் மிகவும் அழகானவை.. உலக மக்கள் மத்தியில் இப்படங்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து உள்ளது.

    ஏராளமான வித விதமான பியர் ரின்களைச் சேகரித்துள்ள வித்தியாசமான மனிதர்!



    நிக் வெஸ்ட் என்பவர் இங்கிலாந்தின் நோர்த் சமர்செஸ்ட் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு தற்போது 51 வயது. கடந்த 35 வருடங்களாக இவர் பழைய பியர்கேன்களைச் சேகரிப்பதைப் பழக்கமாகக் கொண்டுள்ளார். 

    விதவிதமான 6788 பியர்கேன்களை இவர் இதுவரைச் சேகரித்துள்ளார். இவருக்கு 16 வயதாக இருந்த போது இவரின் காதலியாக இருந்த டொரோதி பியர்கேன் சேகரிப்புப் பற்றி ஒரு புத்தகத்தை இவருக்கு வழங்கினார். 

    அடுத்த 35 வருடங்களுக்கு இவரோடு இதில் தானும் சேர்ந்து காலத்தைக் கழிக்க வேண்டியிருக்கும் என்று தெரியாமல் இதைச் செய்து விட்டார். 

    நிக் வெஸ்ட்டின் காலம் இதிலேயே கழிந்து விட்டது. சேகரிக்கும் பியர்கேன்களை வைக்க இடம் போதாது என்பதற்காக தனது வீட்டைக் கூட மாற்றிக் கொண்டார். 

    பார்வையாளர்களைக் கவர்ந்த இரட்டைத் தலைப் பாம்பு! (பட இணைப்பு

    சுவிட்ஸர்லாந்தில் உள்ள பேஸல் நகரில் இடம்பெற்ற ஒரு மிருகக் கண்காட்சியில் அனைவரினதும் கவனத்தை ஈர்த்தது இந்த இரட்டைத் தலைப் பாம்பு தான். 

    இவ்வாறு இரண்டு தலைகள் கொண்ட பாம்புகள் உலகில் எட்டு இருப்பதாக இதன் உரிமையாளர் டொம் பெஸர் கூறினார். 

    ஒரு பார்வையாளர் 13000 பவுண் கொடுத்து இந்தப் பாம்பை வாங்க முன்வந்தும் அதை விற்க பெஸர் மறுத்துவிட்டார். 

    இதன் உண்மையான பெறுமதி அதைவிட அதிகம் என்று அவர் கூறுகின்றார்.

    த்ரிஷாவுக்கு கல்யாணம்

    நடிகை த்ரிஷா இந்த ஆண்டு இறுதிக்குள் கல்யாணம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யாவின் குஷி படத்தின் மூலம் சிறிய கேரக்டரில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. 

    பிற்காலத்தில் நாயகியாக முன்னேறி, பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நாயகிகள் பட்டியலில் இடம்பிடித்த த்ரிஷா, போதையில் குத்தாட்டம், நிர்வாண குளியல் என பல சர்ச்சைகளையும் சந்தித்து விட்டார். 

    தமிழ், தெலுங்கு என பிஸியாக இருந்த த்ரிஷா, சமீபத்தில் இந்தி படம் ஒன்றிலும் நடித்தார். இதுவரை காதல் வலையில் சிக்காமல் இருந்து வந்த த்ரிஷா, இப்போது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளாராம். 

    விஜய் பிறந்தநாளில் வேலாயுதம்

    வேலாயுதம் படத்தில் படுபிசியாக இருக்கிறார் நடிகர் விஜய். இப்படம் வருகிற ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்தநாளில் ரிலீஸ் ஆகிறது. 

    Sri lanka Cricket Team-2011