சனி, 12 மார்ச், 2011

"கலை இளவல்" தம்பிலுவில் தயா

''தம்பிலுவில் தயா எனும் புனைபெயரில் எழுதும் நடேசன் தயானந்தம் அம்பாறை மாவட்த்திலுள்ள தம்பிலுவில் ஐப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1996 ல் எழுதத் தொடங்கிய தம்பிலுவில் தயா அக்காலத் தில் மூத்த அறிஞர் கலைஞர்களுடன் கொண்டிருந்த தொடர்பினால் அவர்களின் கருத்துக்களைக்கேட்டும் வாசித்தும் தனக்கு இலக்கியத் துறையில் ஆர்வம் வந்ததாகக் கூறுகின்றார். இதன் பயனாக இவர் ஒரு சிறந்த கவிஞன் மட்டுமல்லாது சிறந்த எழுத்தாளனாகவும், நாடகாசிரியராகவும், கட்டுரையாசிரியராகவும், சிறந்த பாடகனாகவும் இருந்து கவிதைகள் ஆய்வுக்கட்டுரைகள், மெல்லிசைப்பாடல்கள், சிறுகதைகள் நாடகங்கள், வில்லுப்பாட்டுகள் போன்ற பல ஆக்கங்களுக்குச் சொந்தக்காரராகவும் திகழ்கின்றார்.
              இவரின் கவிதைகள் பல அக்காலப் பத்திரிகைகளான தினபதி, தினமணி, சிந்தாமணி போன்றவற்றிலும் தினக்குரல், வீரகேசரி.தினமுரசு, தினக்கதிர், தினகரன் போன்ற தற்போதைய பத்திரிகைகளிலும் வெளிவந்ததோடு, சுடர, திருஒளி, கண்மணி, மாணிக்கம், குரல், திருப்பம்(இந்தியா) போன்ற சஞ்சிகைகளிலும் வெளிவந்திருந்தன. அதுமட்டுமல்லாது வாலிபர் வட்டம், ஆடவர் அரங்கு, ஒலிமஞ்சரி, இளைஞர் மன்றம், நாளையசந்ததி, கவிதைக்கலசம், வளரும் பயிர் போன்ற வானொலி நிகழ்ச்சியில் தமது இடத்தினைப் பிடித்ததோடு, இவரின் மெல்லிசைப்பாடல்கள் தமக்கென ஒரு இடத்தை தொலைக்காட்சிகளிலும் பிடித்திருந்தன.
   தமது பிரதேசத்திலமைந்துள்ள பல ஆலயங்களுக்குக் பாமாலை சூட்டியிருக்கும் இவருக்கு அப்பிரதேச பாடசாலைகள், ஆலய நிருவாகங்கள், சமூகசேவை அமைப்புகள் பலவும் பொன்னாடை சூட்டிக் கௌரவிக்கவும் மறக்கவில்லை
     அதுமட்டுமன்றி சமய சமூக பல்துறை கலைஞர்களை கௌரவித்து வருடாவருடம் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் அகில இலங்கைச் சபரிமலை சாஸ்தா பீடமானது 1993.03.14 ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களால் கலை இளவல் என்ற பட்டம் வழங்கிக் கௌரவித்தமை இவரின் தேசியரீதியான புகழை எடுத்தியம்புகின்றதெனலாம்.

சனி, 5 மார்ச், 2011

குறிஞ்சிவாண ன்.....


திருக்கோயில்ப் பிரிவிலுள்ள சாகாமம் எனும் குடியேற்றக்
கிராமத்தில் வசித்துவருகிறார்.

குறிஞ்சிவாண ன் எனும் புனைபெயரில் எழுதும் பி.மாண pக்கம் பதுளை
மாவட்டத்திலுள்ள “தெமோதரை” என்னும் இடத்தைப் பிறப்பிடமாகக்
கொண ;டவர் 65 வயதை அடைந்தும் அறுபடாப் பற்றுக்கொண ;டு கவிதை
எழுதிக்கொண ;டிருக்கிறார். 1963 ல் எழுதத் தொடங்கிய குறிஞ்சிவாண ன்
அக்காலத்தில் “மாக்ண p”இ“அக்கரைப் பாமா”இ “சாகாமம் மண pயன்” போன்ற
புனைபெயர்களிலும் கவிதை எழுதினார்.
மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் அக்கரைப்பற்றில் சிலகாலம்
வாழ்ந்து தற்போது திருக்கோயில்ப் பிரிவிலுள்ள சாகாமம் எனும் குடியேற்றக்
கிராமத்தில் வசித்துவருகிறார். தனது 18 வது வயதில் “வெற்றி நமதே” என்னும்
தலைப்பில் வீரகேசரிக்கு தனது கன்னிக்கவிதையை எழுதினார். தொடர்ந்து
தினபதிஇசிந்தாமண pஇராதா சுதந்திரன்இசெய்தி போன்ற பத்திரிகைகளில் இவரது
100 ற்கும் மேற்பட்ட கவிதைகள் பிரசுரமாகின.
1968 ல் “கல்லச்சு இயந்திரம்” ஒன்றைத் தயாரித்து அதன்மூலம் “மலைக்கீதம்”
எனும் மெல்லிசைப் பாடல் தொகுதியொன்றை வெளியிட்டார். அடுத்து மலையக
மக்களின் பிரச்சினைகளை மையமாகவைத்து “தேனிசை” என்ற
பாடல்தொகுப்பைப் பிரசுரித்தார் 1991 ல் ஐரோப்பிய நாடான பெர்லின் நகரில்
அமரர் “நடேசையர்” நினைவாக நடைபெற்ற தமிழ் இலக்கிய மகாநாட்டில்
இவரது 50 கவிதைகள் பார்வைக்கு வைக்கப்பட்டன.
அக்கரை மாண pக்கம்இ அமரர். கவிஞர் க.வடிவேல் கல்முனை பூபால்இ
சி.கனகசூரியம் போன்றௌருடன் கவியரங்குகளில் பங்குகொண ;டு சிறந்த
கவிதைகள் பாடியூள்ளார். 1996 ல் திருக்கோவிலில் நடைபெற்ற சாகித்திய
விழாவில் எழுத்தாளர் “அன்புமண p” அவர்களால் பொன்னாடை போர்த்திக்
கௌரவிக்கப்பட்டார். 1998 ல் வெளியான “இன்னும் விடியவில்லை” எனும்
மரபுக் கவிதைத் தொகுதியில் இவரது கவிதைகள் உள.
தற்போது 50 கவிதைகளைச் சேர்த்து அடுத்த கவிதைத்தொகுதி
வெளியிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார

    கவிக்கோகிலம் "தம்பிலுவில் ஜெகா"


    'தம்பிலுவில் ஜெகா" எனும் புனைபெயரில் எழுதும் இவரின் இயற்பெயர் திருமதி.ஜெகதீஸ்வரி நாதன். தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்றபோது தனது 12 வது வயதில் 'அன்னை" எனும் கவிதை மூலம் கவிதையுலகில் காலடி எடுத்து வைத்த இவர், 50 வயதைக் கடந்தும் அதே இளமைத் துடிப்புடன் கவிதை உலகில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறார்.
         1972 முதல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன  'சிறுவர் மலர்", 'பூவும்பொட்டும்", 'வாலிப வட்டம்", 'ஒலிமஞ்சரி", 'இளைஞர் மன்றம்" போன்ற வானொலி நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகிய கவிதைகள் இவரின் கவித்துவத்தைப் பறைசாற்றின.
             தினகரன்,வாரமஞ்சரி, வீரகேசரி,சிந்தாமணி போன்ற பத்திரிக்கைகளில் இவரது 50 ற்கும் மேற்பட்ட கவிதைகள் வெளியாகியிருந்தன. தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் தமிழாசிரியராக கடமையாற்றும் இவர் உயர்தர மாணவர் ஒன்றியத்தின் பத்திரிகைப் பொறுப்பாசிரியராக இருந்து கமலம், முத்தாரம்,செந்தாமரை போன்ற சஞ்சிகைகளையும் வெளியிட்டார். 'கோகிலம்" சஞ்சிகையின் துணை ஆசிரியராகவும் இருந்த இவரின் கவிதைகள் கோகிலம், காற்று, தூது, இந்துமதி,இதயசங்கமம், நிறைமதி போன்ற சஞ்சிகைகளில் வெளிவந்ததுடன் பெண் ; சஞ்சிகையில் தற்போதும் வெளிவந்துகொண்டிருக்கிறது.
                பல கவியரங்குகளிலும் பங்குகொண்ட இவர் 'செங்கதிர்" சஞ்சிகையின் 2008 பங்குனி சர்வதேச மகளிர் சிறப்பிதழை அலங்கரித்தார். சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலைய வெளியீடுகளான 'கண்ணாடி முகங்கள்",'கவிதைகள் பேசட்டும்" போன்ற கவிதைத் தொகுப்புகளில் தனது கவிதைகளால் இரசிகர்களின் மனதிலும் நீங்காத இடத்தைப் பிடித்துன்ளார்.
            1996.10.18 இல் திருக்கோயில் பிரதேச சாகித்திய விழாவில் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதுடன் இவரிக் கவித்துவத்திற்கு 1993.03.14 இல் கௌரவ ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களால் 'கவிக்கோகிலம்" எனும் விருதும் வழங்கப்பட்டது. 1998 இல் 'இன்னும் விடியவில்லை" எனும் கவிதைத் தொகுப்பில் இவரது கவிதைகள் நூலாக வெளிவந்தது.