சனி, 12 மார்ச், 2011

"கலை இளவல்" தம்பிலுவில் தயா

''தம்பிலுவில் தயா எனும் புனைபெயரில் எழுதும் நடேசன் தயானந்தம் அம்பாறை மாவட்த்திலுள்ள தம்பிலுவில் ஐப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1996 ல் எழுதத் தொடங்கிய தம்பிலுவில் தயா அக்காலத் தில் மூத்த அறிஞர் கலைஞர்களுடன் கொண்டிருந்த தொடர்பினால் அவர்களின் கருத்துக்களைக்கேட்டும் வாசித்தும் தனக்கு இலக்கியத் துறையில் ஆர்வம் வந்ததாகக் கூறுகின்றார். இதன் பயனாக இவர் ஒரு சிறந்த கவிஞன் மட்டுமல்லாது சிறந்த எழுத்தாளனாகவும், நாடகாசிரியராகவும், கட்டுரையாசிரியராகவும், சிறந்த பாடகனாகவும் இருந்து கவிதைகள் ஆய்வுக்கட்டுரைகள், மெல்லிசைப்பாடல்கள், சிறுகதைகள் நாடகங்கள், வில்லுப்பாட்டுகள் போன்ற பல ஆக்கங்களுக்குச் சொந்தக்காரராகவும் திகழ்கின்றார்.
              இவரின் கவிதைகள் பல அக்காலப் பத்திரிகைகளான தினபதி, தினமணி, சிந்தாமணி போன்றவற்றிலும் தினக்குரல், வீரகேசரி.தினமுரசு, தினக்கதிர், தினகரன் போன்ற தற்போதைய பத்திரிகைகளிலும் வெளிவந்ததோடு, சுடர, திருஒளி, கண்மணி, மாணிக்கம், குரல், திருப்பம்(இந்தியா) போன்ற சஞ்சிகைகளிலும் வெளிவந்திருந்தன. அதுமட்டுமல்லாது வாலிபர் வட்டம், ஆடவர் அரங்கு, ஒலிமஞ்சரி, இளைஞர் மன்றம், நாளையசந்ததி, கவிதைக்கலசம், வளரும் பயிர் போன்ற வானொலி நிகழ்ச்சியில் தமது இடத்தினைப் பிடித்ததோடு, இவரின் மெல்லிசைப்பாடல்கள் தமக்கென ஒரு இடத்தை தொலைக்காட்சிகளிலும் பிடித்திருந்தன.
   தமது பிரதேசத்திலமைந்துள்ள பல ஆலயங்களுக்குக் பாமாலை சூட்டியிருக்கும் இவருக்கு அப்பிரதேச பாடசாலைகள், ஆலய நிருவாகங்கள், சமூகசேவை அமைப்புகள் பலவும் பொன்னாடை சூட்டிக் கௌரவிக்கவும் மறக்கவில்லை
     அதுமட்டுமன்றி சமய சமூக பல்துறை கலைஞர்களை கௌரவித்து வருடாவருடம் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் அகில இலங்கைச் சபரிமலை சாஸ்தா பீடமானது 1993.03.14 ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களால் கலை இளவல் என்ற பட்டம் வழங்கிக் கௌரவித்தமை இவரின் தேசியரீதியான புகழை எடுத்தியம்புகின்றதெனலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக